சர்க்கரை நோய் உள்ளவர்கள் மஷ்ரூம்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம் ஏனெனில் அதில் சர்க்கரை இல்லை என்கிறார் ஒரு நிபுணர்....
இமாச்சல பல்கலைக் கழக உயிர்விஞ்ஞான துறை பேராசிரியரான டி.என். லக்கன்பால் இதனை தெரிவித்துள்ளார்.
"நன்கு பயிர் செய்யப்பட்ட காளான்கள், காட்டுப்பகுதியில் விளையும் காளான்கள் கூட உட்கொள்ளத் தகுதியானதே. ஏனெனில் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முக்கியமான ஊட்டச்சத்து மூலகங்கள் அதில் உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கவலைப்படவேண்டியதில்லை. மஷுரூமில் சர்க்கரை இல்லை" என்று கூறுகிறார் அவர்.
100வது இந்திஅய் விஞ்ஞான மாநாடு கொல்கட்டாவில் நடைபெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கொழுப்பு இல்லாததால் மஷ்ரூமினால் உடல் பருமனும் ஏற்படுவதில்லை.
தற்போது மஷ்ரூம் பயலாஜி என்ற துறை வேகமாக ஒரு ஆய்வுத்துறையாக வளர்ந்து வருகிறது என்கிறார் லக்கன்பால்.
மேலும் புற்றுநோய், எச்.ஐ.வி. ஆகிய பயங்கர, கொடிய நோய்களுக்கான தீர்வும் மஷ்ரூமில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மஷ்ரூம் மருத்துவ பயனில் சிறப்பானது மட்டுமின்றி பொருளாதாரப் பயனும் கொண்டது. மஷ்ரூம் வளர்ப்பு ஒரு குடிசைத் தொழிலாக செய்யப்படகூடியதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக