எவ்வளவு இடைவெளியில் ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம் என்ற கணக்குத் தேவையில்லை, ஆனால் லிவர் கேன்சர் பாதிப்புகளையும், அல்லது லிவர் சேத மரணத்தையும் ஆஸ்பிரின் மாத்திரைகள் தடுப்பதாக அமெரிக்க புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது...
ஏ.ஏ.ஆர்.பி. டயட் மற்றும் ஹெல்த் ஆய்வில் 50 வயது முதல் 71 வயது வரையிலான 3,00,000 லட்சம் பேர்களை ஆய்வு செய்ததில் ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டவர்கள் அல்லது ஆஸ்பிரின் இல்லாமல் ஸ்டிராய்ட் அற்ற வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டவர்கள் இதில் அடங்குவர்.
இதில் ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டவர்களுக்கு லிவர் கான்சர் நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென் படவில்லை. மேலும் ஆஸ்பிரின் எடுத்துக் கொண்ட லிவர் நோய் உள்ளவர்கள் ஆஸ்பிரின் மாத்திரைகளால் மரணத்தை இதுவரை வென்று வந்துள்ளனர் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தேசிய கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி இந்தச் செய்தியை பி.பி.சி. வெளியிட்டுள்ளது.
மேலும் ஆஸ்பிரினை தொடர்ந்து நீண்ட நாட்கள் எடுத்து வருபவர்களுக்கு எந்த விதமான கேன்சர் வருவதற்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக இந்த ஆய்வில் ஈடுபடாத பர்மிங்ஹாம் அலபாமா பல்கலை புற்றுநோய் நிபுணர் டாக்டர் போரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்பிரின் தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்று நோய் ஆபத்து அதிகம் ஏற்படுவதில்லை என்பது நீண்ட நாட்களாகவே கூறப்பட்டு வரும் ஆய்வு முடிவாகும்.
ஆஸ்பிரினின் புற்றுநோய் தடுப்புச் சக்தியை குறித்து நிறைய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக