Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

29.11.13

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால்.-(ORU MANITHAN ORU NIMIDATHIRKU 15 MURAI SUVASITHAL)



ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. 


{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில்
கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்).

28.11.13

சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே!-(SAAPITATHUM COOL WATER VENAMEY)


சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

வெது வெதுப்பான தண்ணீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.

ஜீல் தண்ணீர் வேண்டாமே

ஜீல்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜீல் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

ஜீல் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக ஜீல் தண்ணீரை எடுக்ககூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்.-(Arivai perukum Toppukkaranam)




ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

டயட்டிங் - செய்யக் கூடியவையும் கூடாதவையும்-(DIET SEIYAKUDIYAVAIUM KOODATHAVAIUM)

உடல் மெலிவதற்காக சிலர் தானாகவே உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வார்கள். அப்படி செய்யக் கூடாது. அது தேவையற்ற பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் அதற்கு முதல் படி உணவுச் சத்து நிபுணரிடம் ஆலோசனைப் பெற வேண்டும்.

செய்யக் கூடியவை

பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் அதிகம் சாப்பிடலாம். அவற்றின் கலோரி குறைவாக இருந்தாலும் கால்ஷியம் மற்றும் பிற சத்துக்கள் அதிகம் இருப்பதால் எனர்ஜி கிடைக்கும்.

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். எட்டிலிருந்து ஒன்பது க்ளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடல் சக்தியை மேன்படுத்தும். புத்துணர்வுடன் இருக்க நீர்ச்சத்து உடலில் சமன் நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் இருபது நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. உடலை வலுவாகவும் ஃபிட்டாகவும் வைக்க பயிற்சி அவசியம். கடினமான பயிற்சிகள் செய்யத் தேவையில்லை. வாக்கிங், ஜாகிங் அல்லது ஸ்விம்மிங் செய்யலாம்.

செய்யக் கூடாதவை

கடைபிடிக்க முடியாத வகையில் டயட் இருக்க‌ வேண்டாம். எளிமையான டயட்டிங் (சத்துணவு, நல்ல உறக்கம், போதிய நீர்ச் சத்து, குறைவான சர்க்கரை, ஜன்க் உணவுகளைத் தவிர்த்தல்) போதுமானது.

சிலர் டயட்டிங் என்று நினைத்து குறைவாக சாப்பிடுவார்கள் . அப்படி செய்யக் கூடாது. உண்ணும் உணவின் அளவு முக்கியம்.

ரெட் மீட், போர்க், பீஃப் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

மாரடைப்பு ஏற்பட்டால்...(Maaradaippu Yerpattal)


செய்ய வேண்டிய முதல் உதவி

யாரோ நம்முடைய மார்புப் பகுதியை அழுத்துவதுபோன்ற கடுமையான வலி ஏற்படும். அதிக வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோன்று இருக்கும். இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்பாகக்கூட இருக்கலாம். 

* 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது மைனர் ஹார்ட் அட்டாக்....

* 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது சிவியர் ஹார்ட் அட்டாக்.

* இதில் எந்த வகையாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

* மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். இந்த மாத்திரை ரத்தம் உறைதலைத் தடுப்-பதுடன், கட்டிப்போன ரத்தத்தைச் சரிசெய்ய முயற்சிக்கும்.

* மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நேரம் ஆகும் என்றால், அவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளிக்கலாம்.

* மாரடைப்பின்போது, இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும்.