20.3.20
சிலோன் பரோட்டா -(Ceylon Parotta seimurai epadi in Tamil
தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
உப்பு
சர்க்கரை - 1 தேக்கரண்டி
முட்டை - 1
எண்ணெய்
தண்ணீர்
சிலோன்பரோட்டா செய்முறை
1. சிலோன் பரோட்டாவிற்கு மாவு பிசைவதற்கு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
2. இந்த மாவில் ஒரு முட்டை அதை சுற்றி எண்ணெய் விட்டு நன்கு பிசையவும்.
3. அடுத்து இந்த மாவிற்கு தேவையான அளவு தண்ணீரை படிப்படியாக சேர்த்து நன்கு பிசையவும்.
4. மாவை நன்கு பிசைந்த பின்பு அதை முப்பது நிமிடம் மூடிவைக்கவும்.
5. முப்பது நிமிடம் கழித்து மாவை சுற்றி எண்ணெய் தடவி ஒரு பத்து நிமிடத்திற்கு பிசைந்து மேலும் ஒரு மணி நேரம் மூடிவைக்கவும்.
6. ஒரு மணி நேரம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து வைத்து மாவு உருண்டை மீது எண்ணெய் தடவி மேலும் ஒரு மணி நேரம் மூடிவைக்கவும்.
7. ஒரு மணி நேரம் கழித்து மாவு உருண்டையை தேய்க்கும் கல்லில் வைத்து கைகளால் நன்கு மெலிதாக தேய்க்கவும்.
8. மாவை நன்கு மெலிதாக தேய்த்த பின்பு அதன் ஓரங்களை நான்கு புறமும் மடிக்கவும்.
9. அடுத்து ஒரு தவாவை சூடு செய்து இந்த பரோட்டாவை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை சூடவும் .
10. சூடான மற்றும் மிகையும் எளிமையான சிலோன் பரோட்டா தயார்

பொங்கல்-(PONGAL SEIYATHU EPADI IN TAMIL)
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
மிளகு - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
நெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
தண்ணீர்
பொங்கல் செய்முறை
1. மிளகு பொங்கல் செய்வதர்க்கு ஒரு குக்கரில் பச்சை அரிசி, பாசிப்பருப்பு இந்த இரண்டையும் நன்கு சுத்தமாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைக்கவும்.
2. அடுத்து பொங்கலை தாளிக்க ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய், சீரகம், இடித்த மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறிசெய்து வைத்த சீரகம்சேர்த்து நன்கு கலக்கவும்.
3.இறுதியாக இந்த பொங்கலை நெய் சேர்த்து பறிமாறவும்.
4. சூடான எளிமையான பொங்கல் தயார்
வெஜிடபுள் சப்ஜி-(VEGETABLE SUBJI SEIMURAI IN TAMIL)
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கேரட் - 1
பீன்ஸ் - 8
உருளைக்கிழங்கு - 1
குடைமிளகாய் - 1/2
காலிஃபிளவர்
பட்டாணி - 1/2 கப்
பன்னீர் - 100 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 3
உப்பு - 1 தேக்கரண்டி
காஷ்மீர் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
சீரகம் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர்
கசூரி மெதி
பிரெஷ் கிரீம் - 1/2 கப்
கொத்தமல்லி இலை
வெஜிடபுள்சப்ஜி செய்முறை
1. வெஜிடபுள் சப்ஜி செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் சிறிய துண்டுகளாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ், ஒரு உருளைகிழங்கு தோலை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும், பாதி குடை மிளகாய் சிறிய துண்டுகளாக நறுக்கியது, பாதி காலிப்ளவ்ர் சிறிய துண்டுகளாக நறுக்கியது, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
2. அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
3. அதே கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. நன்கு வதக்கிய பின்பு வதக்கிய காய்கறி மற்றும் வறுத்த பன்னீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. நன்கு கலக்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
6. பத்து நிமிடம் கழித்து இதில் கசூரி மேத்தி, கொத்தமல்லி இலை மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து பரிமாறவும்.
7. சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சப்ஜி தயார்.
சிக்கன்மசாலா செய்முறை-(CHICKEN MASALA SEIMURAI IN TAMIL)
தேவையான பொருட்கள்
சிக்கன் மசாலா தூள் தயாரிக்க
மல்லி விதைகள் - 3 மேசைக்கரண்டி
சீரகம் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 8
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
தேவையான பொருட்கள்
சிக்கன் மசாலா தயாரிக்க
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சிக்கன் மசாலா தூள் - 3 தேக்கரண்டி
சிக்கன் - 1 கிலோ
உப்பு
தண்ணீர்
கொத்தமல்லி இலைகள்
புதினா இலைகள்
கறிவேப்பிலை
சிக்கன்மசாலா செய்முறை
1. சிக்கன் மசாலா தூள் செய்ய ஒரு கடாயில் மல்லி விதை, சீரகம், சோம்பு, வெந்தயம், மிளகு, காய்ந்த சிவப்பு மிளகாய், வறுத்த கறிவேப்பிலை சேர்த்து நன்கு தூளாக அரைக்கவும்.
1. சிக்கன் மசாலா தூள் செய்ய ஒரு கடாயில் மல்லி விதை, சீரகம், சோம்பு, வெந்தயம், மிளகு, காய்ந்த சிவப்பு மிளகாய், வறுத்த கறிவேப்பிலை சேர்த்து நன்கு தூளாக அரைக்கவும்.
2. சிக்கன் மசாலா செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நீளமாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் அரைத்த சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. இந்த வதக்கியவற்றில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
5. அடுத்து இந்த கலவையில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பதினைந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
6. பதினைந்து நிமிடம் கழித்து இதில் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலைகளை சேர்த்து மேலும் பதினைந்து நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.
7. பதினைந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
8. எளிமையான சிக்கன் மசாலா தயார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)