Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

20.3.20

சிலோன் பரோட்டா -(Ceylon Parotta seimurai epadi in Tamil

தேவையான பொருட்கள்

மைதா - 2 கப்
உப்பு
சர்க்கரை - 1 தேக்கரண்டி
முட்டை - 1
எண்ணெய்
தண்ணீர்

சிலோன்பரோட்டா செய்முறை

1. சிலோன் பரோட்டாவிற்கு மாவு பிசைவதற்கு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

2. இந்த மாவில் ஒரு முட்டை அதை சுற்றி எண்ணெய் விட்டு நன்கு பிசையவும்.

3. அடுத்து இந்த மாவிற்கு தேவையான அளவு தண்ணீரை படிப்படியாக சேர்த்து நன்கு பிசையவும்.

4. மாவை நன்கு பிசைந்த பின்பு அதை முப்பது நிமிடம் மூடிவைக்கவும்.

5. முப்பது நிமிடம் கழித்து மாவை சுற்றி எண்ணெய் தடவி ஒரு பத்து நிமிடத்திற்கு பிசைந்து மேலும் ஒரு மணி நேரம் மூடிவைக்கவும்.

6. ஒரு மணி நேரம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து வைத்து மாவு உருண்டை மீது எண்ணெய் தடவி மேலும் ஒரு மணி நேரம் மூடிவைக்கவும்.

7. ஒரு மணி நேரம் கழித்து மாவு உருண்டையை தேய்க்கும் கல்லில் வைத்து கைகளால் நன்கு மெலிதாக தேய்க்கவும்.

8. மாவை நன்கு மெலிதாக தேய்த்த பின்பு அதன் ஓரங்களை நான்கு புறமும் மடிக்கவும்.

9. அடுத்து ஒரு தவாவை சூடு செய்து இந்த பரோட்டாவை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை சூடவும் .

10. சூடான மற்றும் மிகையும் எளிமையான சிலோன் பரோட்டா தயார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக