தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 3
பால் - 2 கப்
கோவா - 3 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
நெய்
செய்முறை
1. பீட்ரூட் ஹல்வா செய்வதற்கு ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கி கடாயை மூடி பத்து நிமிடம் வேகவைக்கவும்.
2. பத்து நிமிடம் கழித்து வேகவைத்த பீட்ரூட்டில் பால் மற்றும் இனிப்பில்லாத கோவா சேர்த்து நன்கு கலந்து பதினைந்து நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
3. பதினைந்து நிமிடம் கழித்து இதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பால் வற்றும் வரை கிளறவும்.
4. இறுதியாக இதில் நெய் மற்றும் நெயில் வறுத்த முந்திரி பருப்புகளை சேர்த்து ஹல்வா பதம் வரும் குறைவான தீயில் கிளறவும்.
5. சுவையான பீட்ரூட்ஹல்வா தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக