st

சித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)

1.நெஞ்சு சளி: [NENJU JALI]
   தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.


2.தலைவலி: [THALAI VALI]
             ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3.தொண்டை கரகரப்பு: [THONDAI KARAKARPU]
          சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4.தொடர் விக்கல்: [VIKKAL]
      நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்...

5.வாய் நாற்றம்: [VAI NATTRAM]
         சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6.உதட்டு வெடிப்பு: [UTHADU VEDIPPU]
      கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7.அஜீரணம்: [AJIRANAM]
       ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்..

8.குடல்புண்:[KUDAL PUN]
    மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9.வாயு தொல்லை: [VAYU THOLLAI]
          வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10.வயிற்று வலி: [STOMATCH PAIN]
    வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11.மலச்சிக்கல்: [MALA SIKKAL]
    செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12.சீதபேதி: [SEETHA PETHI]
      மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13.பித்த வெடிப்பு: [PITHA VEDIPPU]
     கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14.மூச்சுப்பிடிப்பு:[MUCHU PIDIPPU]
           சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15.சரும நோய்: [SKIN PROBLEM]
        கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16.தேமல்: [THEMAL]
       வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்..

17.மூலம்: [MOOLAM - PILES]
      கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18.தீப்புண்: [THEE PUN]
        வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19.மூக்கடைப்பு: [MUKKADAIPPU]
        ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20.வரட்டு இருமல்: [VARATTU IRUMAL]
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.


1.ஓமம் :
அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமி நீங்கிச் சுத்தமாகும்அதைப் புடைத்து அம்மியில் வைத்து அத்துடன் அதே அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு காலை மாலை இரு வேளை வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர வயிறு குணமாகும்உப்புசமும் நீங்கும்.

                                இஞ்சிச்சாறுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்துகல் உப்பைப் பொடித்துச் சேர்த்துக் குடித்தால்செரிமானக் கோளாறு சட்டென சரியாகும்கால் ஆணி சரியாக ஒரு எளிய வைத்தியம்தக்காளியை இரண்டாக வெட்டிஅதன் சதைப் பகுதியை ஆணியின் மேல் வைத்துமீதி அரை தக்காளியால் அதை மூடிஒரு துணியால் கட்டிக் கொண்டு தூங்கவும்கூடவே ஓமத்தை பொடி செய்துசம அளவு சர்க்கரை சேர்த்து, 1 டீஸ்பூன் அளவு இரவில் சாப்பிடவும். 1 வாரம் இரண்டையும் செய்து வரகால் ஆணி குணமாகும்


2.முருங்கை இலை:

 முருங்கை இலையை உப்புச் சேர்த்து லேசாக நசுக்கி கசக்கிப் பிழிந்து வரும் சாற்றில் இரண்டு ஸ்பூன் சாப்பிட உடனே வயிற்றுவலி ங்கும்வெந்தயத்தை ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்து தயிரில் சேர்த்துச் சாப்பிட வயிற்றுவலி குணமாகும்சுக்குமிளகுதிப்பிலி வகைக்கு 10 கிராம்பனை வெல்லம் 5 கிராம் இவற்றில் சுக்கைத் தோல் நீக்கிவிட்டு பின் மற்ற சரக்குகளையும் தூளாக்கி அத்துடன் பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் காலையில் சிறிதளவு உள்ளுக்கு அருந்தி வர அஜீரண சம்பந்த வயிற்றுவலி குணமாகும்


3. வசம்பு:

குழந்தை வயிற்று வலியால் துடித்தால் வசம்பு சுட்ட சாம்பலுடன் சிறிது தேன் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விடுவதோடுவசம்பு சுட்டகரியைச் சிறிது நீர்விட்டு குழைத்து வயிற்றில் கனமான பற்று போட்டுவந்தால் குணமாகும்வயிற்றுக் கடுப்பு அதிகமாக இருக்குமானால் தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும்சிறிது பெருங்காயத்தை பொரித்து நீர் மோரில் சேர்த்து அத்துடன் கறி மஞ்சள் தூளில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் வாயு சம்பந்த வயிற்றுவலி நீங்கும்

4.மணத்தக்காளி:
     
மணத்தக்காளி வாய் புண்ணுக்கு நல்லது எனத் தெரியும்மணத்தக்காளிக் கீரையை காரமில்லாமல் பச்சைப் பருப்புடன் சேர்த்து சமைத்தோகீரையை லேசாக வதக்கிவதக்கிய மிளகாய்தேங்காய்உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தோ சாப்பிடநீண்ட நாள் இருமலால் உண்டான தொண்டைப் புண்ணும்ரணமும் ஆறும்இஞ்சியைக் கழுவிதோல் நீக்கி சின்னத் துண்டுகளாக வெட்டவும்சுத்தமான தேனில் அதை நான்கைந்து நாட்கள் ஊற வைக்கவும்தினம் இதில் ஒரு துண்டு சாப்பிட்டு வரசருமச் சுருக்கங்கள் நீங்கிஇளமை ஊஞ்சலாடும்


5.முட்டைக்கோஸ் : 
முட்டைக்கோஸை மிக்சியில் போட்டுதண்ணீர் விடாமல் பொயாகும்படி சுற்றவும்அத்துடன் கொஞ்சம் உப்பும் மிளகுத்தூளும் கலந்துகொஞ்சம்கொஞ்சமாகச் சாப்பிடஎப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும்முட்டைக்கோஸ் வேக வைத்த தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிப்பதும் பலன் தரும்திடீரென காது வலிக்கிறதாபூண்டை உரித்துஒரு மெல்லிய துணியில் சுற்றிவலிக்கிற காதுக்குள் 1 மணி நேரம் வைத்திருக்கவும். 2-3 நாட்களுக்கு அப்படிச் செய்தால்காது வலி சரியாகும்சீழ் வடிவதும் நிற்கும்.


3 comments

themal marunthu super yapdi

Reply

ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்

சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,

சர்க்கரை, சொரியாசிஸ், மூட்டு வலி, பக்கவாதம், ஆஸ்துமா, உடல் பலவீனம்,
ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, பால்வினைநோய்கள், விறைப்பின்மை
விந்து முந்துதல், உயிரணுக்கள் குறைபாடு, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய்கோளாறுகள்
நீர்க்கட்டி,சினைப்பைக்கட்டி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறலாம்...

எங்களது சித்த மருந்துகளை வாங்க http://www.drarunchinniah.in/

தொடர்புக்கு:
ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்

+91.8608400035, +91.8608400041
Aadhavan Siddha Groups +91.8754473544

Reply

this is very usefull tips for me thank you

Reply

Post a Comment