Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

23.9.21

சத்துமாவு கஞ்சி தரும் உடலுக்கு ஆரோக்கியம் -(UDALUKKU AAROKIYAM THARUM SATHTHU MAAVU KANJI)

தேவையான பொருட்கள்

கம்பு - 100 கிராம், 

ராகி - 100 கிராம், 

கோதுமை - 100 கிராம், 

பச்சரிசி - 100 கிராம், 

உளுந்து - 100 கிராம், 

பாசிப்பயறு - 100 கிராம், 

கொள்ளு - 100 கிராம், 

வேர்க்கடலை - 100 கிராம், 

முந்திரி - 100 கிராம், 

பாதாம் - 100 கிராம், 

ஏலக்காய் - 100 கிராம், 

ஜவ்வரிசி - 100 கிராம், 

மக்காச் சோளம் - 100 கிராம், 

கொண்டக்கடலை - 100 கிராம், 

பொட்டுக்கடலை - 100 கிராம்.


மாவு தயாரிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும். 

வறுத்தவுடன் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் (அ) மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.

 மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும்.


சத்துமாவு கஞ்சி செய்முறை

சத்துமாவு - 2 ஸ்பூன்

பால் - 2 டம்ளர்

தண்ணீர் - 2 டம்ளர்

சர்க்கரை - தேவைக்கு 


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.

 கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும். சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து கலக்கி இறக்கவும். 

அவ்வளவு தான் சுவையான, ஆரோக்கியமான சத்துமாவு கஞ்சி தயார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக