தினமும் காலை 5.00- 5.30 மணிக்குள் செய்ய வேண்டியது.
கண் கழுவுதல்: ஒரு சுத்தமான பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் எடுத்து இடுப்பு அளவு உயரமுள்ள மேடையில் வைத்துக்கொள்ளவும். பிறகு முகத்தை வெறும் தண்ணீரால் 3 முறை முகம் கழுவி ஒரு டவலால் முகத்தை துடைத்துக் கொள்ளவும். முகத்தை டப்பில் உள்ள தண்ணீரால் நனைக்கவும். (கண்ணின் வெளிப்புறம் நனையும் வரை நாக்கை வெளியே நீட்டி கண்களை நன்கு திறந்து கொண்டு நனைக்கவும்.) அப்பொழுது நம் உதடுகள், நாக்கு, மூக்கு, கண் ஆகியவை மட்டும் நனையும் ( காது வரை நனைய வேண்டியதில்லை) மனதிற்குள் 10 வரை எண்ணவும்..
பிறகு தலையை டப்பிளிருந்து வெளியே எடுக்கவும். இவ்வாறு 10 முறை செய்தபின் ஒரு டவலால் முகத்தைத் துடைத்து கொள்ளவும். இதே போல் இரவு உணவுக்கு 7மணிக்கு பின்பும் (படுப்பதற்கு 10 நிமிடம் முன்பாகவும் செய்யவும்.)
பயன்கள்:
தலைவலி, சைனஸ், சளி, நெஞ்சு சளியினால் வலி, உடற்சோர்வு, தொண்டைக்கட்டு, கண் எரிச்சல், உடல் வலி, உடல் உள் உறுப்புகளில் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.
தினமும் உலர்திராட்சை: தினமும் இரவு ஒரு டம்ளர் கொதிக்க வைத்த தண்ணீரில் 10-15 கருப்பு உலர் திராட்சையைப் போட்டு மூடி வைக்கவும். அதிகாலையில் கண் கழுவுதல் பயிற்சி செய்த பின் உலர் திராட்சையை வடிகட்டி தண்ணீரை வேறு ஒரு டம்ளரில் பிடிக்கவும். அனைத்து திராட்சை பழங்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நசுக்கி 515 சொட்டு தேன் (சுகர் உள்ளவர்கள் 5சொட்டு தேன் போதுமானது...) கலந்து ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடவும். 5 நிமிடங்களுக்கு பின் வடிகட்டிய தண்ணீர் குடித்து அதன்பின் 15 நிமிடங்கள் கழித்து அரைலிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
பயன்கள்.: ரத்தத்தை சுத்திகரித்து உடல் கழிவுகளை வெளியேற்றி, ரத்த சோகை, புத்துணர்ச்சிக்கும் உதவும்.
இரவு உணவை முடித்து அரைமணிநேரத்திற்கு பின்:
பேரீச்சம் பழம் 4+ மஞ்சள் நிற வாழைப்பழம் 2 மற்றும் தண்ணீர் 2 தம்ளர் எடுத்துக்கொள்ளவும். காலை உணவுக்கு 8 மணிக்கு முன் பேரீச்சம் பழம் 2+ மஞ்சள் நிற வாழைப்பழம் 2 மற்றும் தண்ணீர் 2 தம்ளர் எடுத்துக்கொள்ளவும்.
காலை மற்றும் மாலையில் 8 முறை நடைப் பயிற்சி:
வீட்டின் மாடியில் அல்லது வீட்டின் அருகில் உள்ள வெட்ட வெளியிலும் 8 முறை நடைப்பயிற்சி செய்யலாம்.
காலை உணவு 7.00-9.00 மணிக்குள்:
காலை 10.3011.00 ஊற வைத்து வேகவைத்த/ பயறு வகைகள் + டீ உணவுக்கு முன் ஜூஸ், பழங்கள், சாக்லெட் எடுத்துக்கொள்ளலாம்.
மதியம் சாப்பாடு 1.00-2.00 :
உணவுக்கு முன் வெற்றிலை 3, பாக்கு சுண்ணாம்பு, ஏலம் 1, கிராம்பு 1, ஜாதிக்காய் (மிகச்சிறிய அளவு இடித்தது.)
மாலை 3.30- 4.00:
காபி/ டீ பழக்கலவை 1 கப், இரவு உணவு 7.00-9.00 மணிக்குள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக