கோவை கே.ஜி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் சி.பாலசுப்ரமணியம், தினகரன் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்...
மாரடைப்பை வெல்ல முடியுமா?
மாரடைப்பு என்றும் மணி அடித்துக்கொண்டு வராது. இந்நோய் பலரது உயிரையும் பறித்துள்ள விநோத நோய். தள்ளிவைப்பு, அசட்டை ஆகியவை மாரடைப்பைவிட கொடிய நோய். முழு உடல் பரிசோதனையின்போது மாரடைப்பு அறிகுறி தெரியவந்தால், மாரடைப்பை நாம் வென்றுவிடலாம்.
நடக்கும்போது அதிகம் மூச்சு வாங்குவது எதனால்...?
ஹார்ட் அட்டாக் என்பது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது. இருதய தசைகளின் செயல்பாடு குறைவதால் இருதயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தின் அளவு குறைந்து, சரியாக ரத்தம் வெளியேறாத நிலையில் ஏற்படும் பாதிப்பே ஹார்ட் ஃபெயிலியர். சம தளத்தில் நடக்கும்போது மூச்சு வாங்கினால் ஹார்ட் ஃபெயிலியர் உள்ளது என்று அர்த்தம். உடனடியாக இருதய நோய் நிபுணரை சந்திப்பது நல்லது.
அதிக கோபம் ஆபத்தை விளைவிக்குமா?
அதிக கோபம் வரும்போது அதிகளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போகிறது. கோபத்தால் பணம், பதவி, மரியாதை எல்லாமே போய்விடும். உச்சக்கட்டமாக உயிரும் போய்விடும்.
சாதாரண நெஞ்சு வலிக்கு முதலுதவி மட்டும் போதுமா?
நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனே வீட்டுக்கு அருகில் உள்ள டாக்டரை பார்த்து உடனடி சிகிச்சை எடுப்பது நல்லது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் தரமான இருதய நோய் நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும். நாளை பார்க்கலாம்... காலையில் செல்லலாம்... என தள்ளிப்போடக்கூடாது. இது காலனை வரவழைக்கும். மாரடைப்பு யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காது.
இதயநோய் ஏற்பட பற்களும் ஒரு காரணம் என்கிறார்களே. எப்படி?
பற்களில் பாக்டீரியாவின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் விடுகிறவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது. வயிற்றில் குடல் புண்ணை உருவாக்கும் ஹெலிக்கோ பேக்டர் பைலோரே என்ற நுண்ணுயிரி மாரடைப்பை உருவாக்குகிறது என தற்போது தெரியவந்துள்ளது.
உணவில் பயன்படுத்த உகந்த எண்ணெய் எது?
கொழுப்பு வியாதிக்கு முக்கிய காரணமாக இருப்பது சாப்பாட்டில் நாம் பயன்படுத்தும் எண்ணெய்தான். உணவில் நாம் பயன்படுத்தும் மூன்று விதமான எண்ணெயில் கரையும் கொழுப்பு, கரையாத கொழுப்பு என இருவித கொழுப்பு உருவாகிறது. தாவர வகைகளில் இருந்து தயாரிக்கும் எண்ணெய் சிறந்தது. விலங்குகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உகந்தது அல்ல.
அத்லெடிக் ஹார்ட் என்றால் என்ன?
விளையாட்டு வீரர்களுக்கு இருதயத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதுதான், அத்லெடிக் ஹார்ட் என்று சொல்லப்படுகிறது.
உணவில் வெள்ளை பொருட்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்களே, அது என்ன?
சர்க்கரை, உப்பு, மாவு என்ற மூன்று வெள்ளை பொருட்கள்தான் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன. அந்த வெள்ளை விஷயங்களை ஒதுக்கிவிட வேண்டும். இந்த வெள்ளை பொருட்களை ஒதுக்கிவிட்டு, மனதை எப்போதும் வெள்ளையாய் வைத்திருக்க வேண்டும். தினம் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். நோய் நம்மை அண்டாது.
இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா? மாரடைப்புக்கு கொழுப்பு தான் காரணம் என்கிறார்களே?
மாரடைப்புக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனித மனம் ஏ, பி என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஏ பிரிவை சேர்ந்தவர்கள் சுறு சுறுப்புடன் எப்போதும் டென்ஷன் உடனேயே இருப்பார்கள். இலக்கை நிர்ணயித்து அதை அடைவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள். இந்த மனம் பெற்றவருக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது.
கோவை KG ஹாஸ்பிடல்ல …கோவை கே.ஜி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் சி.பாலசுப்ரமணியம் அவர்களிடம் என் அத்தை பையன் பிரவீன் வயசு 19 கிரிக்கெட் விளையாடும் பொழுது ரன் ஓடினால் நெஞ்சு இடது புற ஓரமாக வலிக்கிறது என்று சொல்லி காண்பித்ததற்கு இருதயத்தில் கொழுப்பு கட்டி இருக்கிறது ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி 48 மணி நேரத்திற்குள் ஆபரேஷன் செய்ய வில்லை என்றால் உயிருக்கு ஆபத்து பையன் இறந்து விடுவான் ஆபரேஷன் செய்ய சுமார் 450000 லட்சம் செலவாகும் என்று கூறினார் .கொழுப்பு கட்டி கரைக்க எதுக்கு அவ்வளவு பணம் என்று கேட்டதற்கு டூலை எட்டு பண்ண முடியாது ஒப்பன் சர்ச்சரி தான் பண்ண முடியும் என்று கூறினார் . இவர் பணம் கறக்கும் நோக்கில் பேசுகிறாரென்று உணர்ந்து நான் நாங்கள் விவசாயி எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று உண்மையை கூறினேன் .அதை [அவர் மற்றும் ஹாஸ்பிடல் நிர்வாகம்] கண்டு கொள்ள வில்லை . தற்போது பணம் இல்லை என்றால் பரவாயில்லை பயனை எப்படியோ பெட்டில் அனுமதிக்கிறோம் நீங்கள் சென்று பணம் ரெடி பண்ணி வாருங்கள் என்று பணம் கறக்கும் முடிவிலேயே பேசிக்கொண்டிருந்தார்கள் .நான் பணம் ரெடி பண்ண சென்று விட்டால் பயனை யார் பார்ப்பது என்று கேட்டேன் அவனை [பிரவீன் ] நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள் .நான் எப்போது போக வெளியே போனால் நான் ப்ரவீனோடுதான் போவேன் என்றேன் .அதற்கு ரிப்போர்ட் எங்களிடமே இருக்கட்டும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பையனை பணம் ரெடி பண்ணி அழைத்து வந்து வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள் .நான் கோபமாக என் மனைவி காவல் துறையில் இருப்பதால் நாங்கள் காவலர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எப்போ பையனை வெளியே விட வில்லை என்றால் அனைத்து மீடியாக்களையும் அழைப்பேன் என்றேன் அதன் பிறகு சிறிது நேரம் கழித்து பைலை எங்களிடம் கொடுத்தார்கள் .நான் கோவை KG ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்ததும் பாண்டிச்சேரி பேருந்துக்கு 2 டிக்கெட்டை புக் செய்து என் அத்தை மகன் பிரவீனை அங்குள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன் அங்குள்ள இருதய சம்பந்தமான 10 டாக்டர்கள் குழு கோவை KG ஹாஸ்பிடல் ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு பிரவீனையும் பரிசோதித்து விட்டு பையனுக்கு ஆபரேஷன் செய்யும் அளவுக்கு ஒன்னும் இல்லை 10 நாள் காலை 1 மாத்திரை இரவு 1 மாத்திரை சாப்பிட்டால் போதும் சரியாகி விடுவான் கீழே உள்ள மெடிக்காலில் மாத்திரையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள் .நான் மீண்டும் அய்யா நன்றாக பரிசோதியுங்கள் கோவை KG ஹாஸ்பிடலில் 48 மணிநேரத்திற்குள் ஆபரேஷன் செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று சொன்னார்கள் என்றேன் தம்பி உண்மையிலேயே நீங்கள் பயப்படும் படியாக ஒன்றுமே இல்லை இது சாதாரண சிறு கோப்பு கட்டி பூண்டு பச்சையாக சாப்பிட்டாலே சரியாகி விடும் நீங்கள் பயப்பட்டதால் தான் மாத்திரை எழுதினேன் அதுவும் பூண்டு மாத்திரை தான் 10 சாப்பிட்டால் சரியாகி விடும் என்றார்கள் . நான் அய்யா மீண்டும் எப்போ அழைத்து வரட்டும் என்று கேட்டேன் 10 நாட்களிலேயே சரியாகி விடும் .உங்களுக்கு பயமாக இருந்தால் ஆறுதலுக்காக 1 முறை வந்து பரிசாதனை செய்து விட்டு போங்கள் என்றார்கள் .அப்படியே செய்தேன் 2 வருடங்கள் கடந்து விட்டது எந்த வலியுமில்லை நன்றாக இருக்கிறான் .இந்த டாக்டர் சி.பாலசுப்ரமணியம் மடையனிடம் ஆபரேஷன் செய்திருந்தால் ஆபரேஷன் சக்ஸஸ் பெசன்ட் ?????????? நினைக்கவே பயமாக உள்ளது .இதை படிக்கும் ஒவ்வொருவரும் 1 அரைகுறை டாக்டர் பேச்சை கேட்டு அவன் கிட்ட சிக்கி உடலை கெடுத்து கொள்ளாமல் வேறு நல்ல டாக்டரிடமும் கலந்து ஆலோசனை பெற்ற கேட்டுக்கொள்கிறேன். [ 2 மருத்துவமனை ரிப்போர்ட் மற்றும் சிகிச்சை பெற்ற மருந்து ரசீது இன்றும் பாது காத்து வருகிறேன் . இந்த உண்மை நிகழ்வை படித்து பிறகு கோவை KG மருத்துவனை என் மீது ஏதாவது வழக்கு நான் முறையாக நுகர்வோர் நீதி மன்றம் மூலமாக அவர்களுக்கு பாடம் கற்பிக்க .]
பதிலளிநீக்குஇப்படிக்கு
தமிழ்நாடு நுகர்வோர்ஆணைய அங்கீகாரம் பெற்ற
நுகர்வோர் நால ஆலோசகர் அ.வேல்முத்துக்குமார்