ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச்செல்ல வேண்டியதில்லை.
ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் பழத்தில் இரும்பு, புலோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி முதலியனஅடங்கியுள்ளன. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.
தேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது..
ரத்தஅழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுற்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு உடனே குணமாகும். வலிப்பு நோய் உள்ளவர்கள் ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி அத்திப் பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் குறைந்துவிடும்.
இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதிகாலையில் இதன் சாற்றைப் பிழிந்து கொடுத்துவந்தால் தூக்கத்தில் எழுந்து நடக்கும் ஆபத்தான நிலையில் இருந்த ஆச்சரியப்படும்படியான நிவாரணத்தைப் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப்பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப்பருமன் அடைவார்கள்.
குடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் குடற் கிருமிகள் அழிந்து விடும்.
இரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.
இரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.
ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து, வயதுக்கு ஏற்ற அளவில் செயல்படும்.
ஆப்பிள் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களும் குணமாகும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக