Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

13.12.13

சிறுகீரை-(SIRUKEERAI)

மருத்துவக் குணங்கள்:.
  1. சாதாரணமாக இந்தியாவெங்கும் தோட்டங்களிலோ, வீட்டுத் தோட்டங்களிலோ பயிர் செய்யப்படும் கீரை வகைகளில் இக்கீரையும் ஒன்றாகும். இக்கீரையானது வட இந்திய மலைப் பகுதிகளில் ஏராளமாக விளையக்கூடியது.
  2. இந்தக் கீரையானது முளைக்கீரை, தண்டுக் கீரை ஆகிய கீரைகளின் இனத்தைச் சார்ந்த சிறிய கீரை வகையாகும். சுமார் இருபது செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது செங்குத்தாக வளரும். நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இச்செடி மிக மெல்லிய தோற்றமுடையது.
  3. இச்செடி 10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடனேயே கீரையைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இக்கீரையை மசியலாகச் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். கறி சமைக்கவும் இக்கீரை உதவுகிறது. இக்கீரையின் இலைகளையும் தண்டுகளையும் முளைக்கீரையைப் போலவே உணவாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம். இக்கீரை விதையும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
  4. இக்கீரை இந்தியாவெங்கிலும் தோட்டப் பயிராகவும், காட்டுப்பயிராகவும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் பயிர் செய்யலாம். விதையைப் பாத்திகளில் விதைத்து வளர்க்கலாம். இக்கீரையைப் பயிரிடுவதற்கு முன் இதற்குரிய பாத்தியை முன்பே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
  5. பாத்திகளைக் கொத்தி எருவிட்டு வைத்துக் கொள்ளுதல் நலம். கோடைகால இறுதியில் விதைகளை அதிக நெருக்கமில்லாமல் விதைப்பது நல்லது. விதைத்த பாத்திகளில் பூவாளியினால் தண்ணீரைத் தெளிப்பது சிறந்த முறையாகும். இவ்வாறு தண்ணீரை காலை வேளைகளில் தெளிப்பதுதான் நல்லது.
  6. ஐந்தாறு நாட்களில் விதைகள் எல்லாம் நன்கு முளைத்துவிடும். இருபத்தைந்து நாட்களில் கீரை தயாராகிவிடும். நாற்பது அல்லது ஐம்பது நாட்களில் கீரை தக்க முதிர்ச்சியடைந்துவிடும். அப்பொழுது கீரையைச் செடியோடு பிடுங்கி உபயோகப்படுத்தலாம்.
  7. இக்கீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்கவேண்டும். இக்கீரைக்கு நிழல் கூடாது வெளிச்சம் மிகுதியும் தேவை. ஆனால் வெப்பம் மிகுதியான காலங்களில் இக்கீரைக்கு அடிக்கடி நீர்பாய்ச்சுதல் வேண்டும்.
  8. பெயரில் தான் சிறுகீரையே தவிர பலன்கள் அதிகம். இக்கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விலகும்.
  9. இந்தக் கீரையை தினமும் சமைத்துச் சாப்பிட இரும்புச் சத்தும், புதுரத்தமும் உடலில் பரவும்.
  10. காச நோய் குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும்.
  11. பெண்களின் மேனி எழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் இக்கீரை. உடல் நலிவுக்கு மருந்து சாப்பிடும்போது மட்டும் சிறுகீரை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.
  12. சிறுகீரை ஒரு சத்து மிகுந்த கீரையாகும். இது மருத்துவ மகத்துவம் வாய்ந்தது. இந்தக் கீரையையினால் உடலுக்கு அழகும் வனப்பும் கிடைக்கும். இது காச நோய், படலம், பாதரச வேகம், வெரணம், மூத்திரக் கிரிச்சர வீக்கம், பித்த நோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு முதலியவைகள் நீங்கும்.
  13. மேலும் இக்கீரை வாத நோயை நீக்க கூடியது என்பார்கள். அத்துடன் கல்லீரலுக்கும் நன்மையைச் செய்யும். விஷக்கடி முறிவாக பயன்படக்கூடிய இக்கீரை  சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளையும் அகற்றவல்லது.
  14. இக்கீரையுடன் சீரகம், மிள்கு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து சூப் வைத்தும் சாப்பிடலாம். கீரையை கடைந்து சாதத்துடனும் சாப்பிடலாம்.
  15. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும் என்பார்கள்.
  16. நல்ல சுவையும் நாவிற்கு ருசியும் உடலுக்கு வலுவும் கொடுக்கும் இக்கீரையை வீட்டுத்தோட்டங்களில் வளர்த்து உணவுடன் சேர்த்து பயனடையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக