Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

20.12.13

காது குடையும் பழக்கம் ஆபத்தானதா?(Kaathu kudaium pazhalakam aapathanatha)


நம்மில் பலரிடம் பொதுவாகக் காணப்படும் பழக்கம், காது குடைவது. சிலர் காது குடைவதில் அலாதி சுகம் காண்கின்றனர். 

இந்த பழக்கம் நல்லதா? அல்லது இதனால் ஏதேனும் கேடு ஏற்படுமா?

ஐம்புலன்களில் ஒன்று செவிப்புலன். காது மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாகும். காதின் உள்ளே செல்லும் குழாயில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும்மெழுகுபோன்ற திரவம் தான் காதிற்குள் தூசி, அழுக்கு செல்லாமல் பாதுகாக்கிறது.

காதின் நடுவில் மெல்லிய ஜவ்வு போன்ற தடுப்பு உள்ளது. இது செவிப்பறையாகும். இது தான் காற்றில் வரும் ஒலி அதிர்வுகளை வாங்கி உள்ளே அனுப்புகிறது.

சிலர் காதிற்குள் ஹேர்ப்பின், தீப்பெட்டிக் குச்சி போன்றவற்றால் குடைவார்கள். இது செவிப்பறையில் பட்டால், ஜவ்வில் ஓட்டை விழுந்து கிழிந்து விட வாய்ப்புள்ளது. எனவே இத்தகைய பழக்கம் காதுக்கு ஆபத்தாக முடியும்.

காது ஒரு மெல்லிய உறுப்பு. இதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக