Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

9.12.13

பேசிக்கொண்டே சாப்பிடலாமா?-(Pesi kondey sapidalama?)

Is it Good to Talk While Eating? - Food Habits and Nutrition Guide in Tamil
'சாப்பிடும்போது பேசக்கூடாது', 'விருட்டென்று சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க வேண்டும்' என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன...
* நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத் துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு எளிமையாக செரிமானம் ஆக உதவும். இல்லாவிட்டால் இடையிடையே தாகம் ஏற்படும். இரைப்பையில் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சீக்கிரம் செரிமானம் ஆகாததால் பசியின்மை தோன்றும்.
* சாப்பிட்டபின் சிலர் மடமடவென்று ஒரு சொம்பு தண்ணீ­ர் குடிப்பார்கள். சாப்பிடும் போது தண்ணீ­ர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு. சாப்பிடும்போது தண்­ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான். சாப்பிட்ட பிறகுதான் நிறைய தண்­ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும். மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்­ணீர் பருகலாம்.
* சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தீனி, பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்­ணீர்கூட தவிர்க்க வேண்டும்.
* சாப்பிட்ட பின்னரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பழங்கள், நொறுக்குத் தீனி எதையும் சாப்பிடக்கூடாது.
* உங்கள் உடலுழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும், இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட மென்மையான உணவுகளை உண்ணலாம். அமெரிக்காவில் காலை உணவை முழு வயிற்றுக்கு சாப்பிடுவார்கள். அவர்கள் மதியத்திற்குள் வேலையை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுப்பார்கள். அதனால் அப்படி பழக்கம் வைத்திருக்கிறார்கள். இங்கு பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் இருப்பதால் மதிய உணவை முழுவயிற்றுக்கு சாப்பிடுவது பழக்கமாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.
* சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க போவதாக கூறியும், விரதம் இருப்பதாக கூறியும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். டயட், விரதம் என்றால் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதில் ஜீரணம் ஆகும் பானங்கள், பழங்கள் சாப்பிட்டாலே விரதம் இருப்பதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். முழுமையாக பட்டினி கிடப்பது உடல்நலத்திற்கு கேடு.
* ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே இடைவெளி கால அளவு எதுவும் கிடையாது. நன்கு பசித்தபிறகு சாப்பிட்டாலே போதுமானது. சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்று கூறி பசிக்காத நேரத்தில் கடமை போல எண்ணி சாப்பிடக்கூடாது. இப்படிச் சாப்பிடுவதுதான் வியாதிகள் உருவாக காரணமாக இருக்கிறது.
* உணவானது இரைப்பையில் செரிமானம் ஆக 3 மணி நேரம் ஆகும். எனவே 4 அல்லது 5 மணி நேர இடைவெளிவிட்டு சாப்பிடுவது சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக