Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

30.1.14

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க ஸ்கரப்-(MUGATHILA ULLA ROMANGALAI NEEKKA SKARAP)

பெண்களின் முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இத்தகைய ரோமங்களை போக்குவதற்கு பெண்கள் நிறைய வழிகளை பின்பற்றி வந்தாலும், அவற்றில் பெரும்பாலான முறைகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுவதில்லை என்பதே உண்மை...

உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்களினால் சில பெண்களுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படும். பெரும்பாலும் உதட்டுக்கு மேல், காதுகளுக்கு அருகில் மற்றும் தாடை பகுதிகளில் அதிகமாக வளரும் இத்தகைய ரோமைங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது சற்று கடினம் தான் என்றாலும் முறையான குறிப்புகளை பயன்படுத்தி இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்...

• சிறிதளவு சக்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இந்த ஸ்கரப்பை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் கீழிருந்து மேலாக தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால் பருக்களை படிப்படியாக மறையும்.

• சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.

• சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்துகொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியும் படிப்படியாக குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக