Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

11.1.14

சர்க்கரை நோய்க்கு சிறந்தது (Sarkarai Noikku Siranthathu Black Tea)



பால் கலக்காத தேநீர், அதாவது பிளாக் டீ, அருந்துபவர்களுக்கு டைப்- 2 வகை நீரிழிவு நோய் வர சாத்தியங்கள் குறைவு என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

டெய்லி டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள ஆய்வுச் செய்திகளின் படி 50 நாடுகளில் மக்கள் அதிகம் பால் கலக்காத பிளாக் டீயை அருந்துகின்றனர். இந்த நாடுகளில் சர்க்கரை நோய் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பிற நாட்டைக் காட்டிலும் குறைவாக்வே உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் தேநீர் அதிகம் எடுத்துக் கொள்வது உடல் பருமனுக்கு எதிராகவும் வேலை செய்வதாக ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டுபிடிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

கிரீன் டீயை பிளாக் டீயாக மாற்றும் புளிக்கவைக்கும் நடைமுறையினால் இயற்கையாகவே ஆரோக்கியம் தரும் பிளேவனாய்ட்களை உற்பத்தி செய்கிறது.

இது தொடர்பாகவே பிளாவனாய்ட்களுக்கும் பிளாக் டீ அருந்துதலுக்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தனர்.

அயர்லாந்தில் ஆண்டொன்றுக்கு ஒரு நபர் 2 கிலோ அளவுக்கு பிளாக் டீ எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் பிரிட்டன், பிறகு துருக்கி உள்ளது. இந்த நாடுகளில் டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு மிகக்குறைவாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக