Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

6.1.14

சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம் (Sarkarai nooiyai thadukum athipazham)


அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக