Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

10.7.22

பச்சை வாழைப்பழம் தரும் பலவித நன்மைகள்-(PACHCHAI VAZHAI PAZHAM THRUM NANMAIGAL)


வாழைப்பழங்களில், பச்சை வாழைப்பழம் 
பலவித 
நன்மைகளை வாரி வழங்குவதாக இருக்கிறது.
                                    பச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் 
புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.
     குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதன் காரணமாக குடல்புண் எனப்படும் அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
                                            குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை 
ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்துக்கு இருக்கிறது.
        பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த 
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இதைச் சாப்பிடலாம்.

  இதய நோயாளிகளுக்கும் பச்சை வாழைப் பழம் நல்லது. சூடுபடுத்திய 1 கப் பச்சை 
வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க 
விரும்புவோர் இதை எடுத்துக்கொள்ளலாம்.

   மஞ்சள் வாழைப்பழத்துடன் ஒப்பிடும்போது பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு 
பொட்டாசியம் சத்து உள்ளது.
     எனவே இதயநோயாளிகள் இதைச் சாப்பிடலாம். ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து 
சிலரின் உடலுக்குப் பயனளிக்காது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
      பச்சை வாழைப்பழத்தில் வைட்டமின் பி 6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் 
சிறப்பாக செயல் புரிய உதவுகிறது. மேலும், ஹீமோகுளோபின் உருவாவதற்கு வைட்டமின் பி 6அவசியமான ஒன்றாகும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த வைட்டமின் உதவுகிறது.

சீரான பற்களின் வளர்ச்சிக்கும் பச்சை வாழைப்பழம் அவசியம் சாப்பிட வேண்டியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக