'தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள்.
நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும்.
குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு உண்டாகும்.
சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும்.
அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக