Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

9.11.13

பூந்தி லட்டு மருத்துவக் குணங்கள் - (Poonthi Laddu MARUTHUVA GUNANGAL).

கடலை மாவு
கடலை மாவு
தேவையானப் பொருள்கள்:
  1. கடலை மாவு – 2 கோப்பை,
  2. சர்க்கரை – 3 கோப்பை,
  3. நெய் – கால் கோப்பை,
  4. முந்திரி(உடைத்தது) – கால் கோப்பை,
  5. திராட்சை – கால் கோப்பை,
  6. தண்ணீர்- 2 கோப்பை,
  7. ஏலப்பொடி – அரைத் தேக்கரண்டி,
  8. லட்டு கலர் – 2 சிட்டிக்கை

செய்முறை:
  • ஒரு பாத்திரத்தில் இரண்டு கோப்பை அளவு கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடலை மாவுடன் நீரை ஊற்றி அதில் கலர் பொடியை சேர்த்து நன்கு கரைக்க வேண்டும்.
  • கரைத்த மாவின் பதம் தோசை மாவின் பதம் போன்று இருக்க வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • எண்ணெய் நன்கு காய்ந்ததும் கரைத்து வைத்த மாவை லட்டுக் கரண்டி அல்லது சல்லடைக் கரண்டியால் எடுத்து  நன்கு காய்ந்த எண்ணெயில் ஊற்ற வேண்டும்..
  • .
  • பூந்தி நன்கு முத்து முத்தாக விழ வேண்டும்.அடுப்பின் அனலை மிதமாக எரிய விட வேண்டும்.
  • பூந்தி நன்கு வெந்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அனைத்து மாவையும் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மற்றும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகுவை அதாவது சர்க்கரையுடன் நீ்ரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்..

  • கொதித்ததும் மிதமான சூட்டில் பத்து நிமிடம் சர்க்கரை பாகுவை வைக்க வேண்டும்.
  • இதில் தனியே எடுத்து வைத்துள்ள பூந்தி, ஏலப்பொடி மற்றும் நெய்யில் வறுத்துள்ள முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • கைகளில் சிறிது நெய்யைத் தடவிக்கொண்டு கைப் பொறுக்கும் சூட்டில்  சிறு சிறு உருண்டையாகப் பிடிக்க வேண்டும்.

  • இப்போது அனைவரும் விழாக்காலங்களில் விரும்பி உண்ணும் லட்டு தயார்.
குறிப்பு:
  •   லட்டு பிடிக்க சரியாக வராவிட்டால் அதனுடன் சிறிது சூடான நீர் சேர்த்து லட்டு உருண்டை பிடிக்கலாம்.

மருத்துவக் குணங்கள்:
  • கடலை மாவில் இயற்கையாகவே புரோட்டீன் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
  • உதாரணமாக ஒரு கப் கடலை மாவில் 178 கலோரிகள் மற்றும் 3 கிராம் கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது.
  • கடலை  மாவை பலவிதமான உணவுகளில் கலந்து சாப்பிடலாம்.
  • கடலை மாவில் உள்ள வைட்டமின் ”பி-6” சத்து உடலில் உள்ள சிவப்பணுக்களை சீராக இயங்க வைக்கிறது.
  • மேலும் முகத்தில் உள்ள பரு, சரும வறட்சி, அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் இருக்கும் கருப்புப் புள்ளிகள் மற்றும் பொலிவிழந்த கூந்தல் போன்றவற்றை இவைக் குணப்படுத்த வல்லது.
  • இத்தகைய நன்மை நிறைந்த பொருள் பூந்தி லட்டில் இருப்பதால் நாம் இவற்றை ருசித்து சாப்பிடலாம்.
“விழாக்காலம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது லட்டுதான் அத்தகைய சிறந்த இனிப்பு வகையான “லட்டுவை” நாம் அனைவரும் விரும்பி உண்போம்; மகிழ்ந்து வாழ்வோம்”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக