கண்டங்கத்தரி, வெள்ளறுகு, நிலவேம்பு, சிறுதேக்கு, விஷ்ணுகிரந்தி, பேராமுட்டி, சிற்றரத்தை, சுக்கு, செவ்வியம், திப்பிலி, சிறுகாஞ்சொறி வேர், கழற்றி வேர் மற்றும் திப்பிலிமூலம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து நீர் விட்டு சுண்டும் வரை நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் சளி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை குறையும்.
அறிகுறிகள்:
- சளி
- உடல் வலி
- காய்ச்சல்
தேவையான பொருள்கள்
- கண்டங்கத்தரி
- வெள்ளறுகு
- நிலவேம்பு
- சிறுதேக்கு
- பேராமுட்டி
- விஷ்ணுகிரந்தி
- சிற்றரத்தை
- சுக்கு
- செவ்வியம்
- திப்பிலி
- சிறுகாஞ்சொறி வேர்
- கழற்றி வேர்
- திப்பிலிமூலம்
செய்முறை:
- சம அளவு கண்டங்கத்தரி, வெள்ளறுகு, நிலவேம்பு, சிறுதேக்கு, விஷ்ணுகிரந்தி, பேராமுட்டி, சிற்றரத்தை, சுக்கு, செவ்வியம், திப்பிலி, சிறுகாஞ்சொறி வேர், கழற்றி வேர் மற்றும் திப்பிலிமூலம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
- இந்த மூலிகையை காய்ச்சலின் போது 5 கிராம் அளவு எடுத்து 200 மி.லி நீர் விட்டு 50 மி.லி ஆக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி காலை, மாலை குடித்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
- சளி சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும். அதிக சளியினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் அனைத்து விதமான வைரஸ் காய்ச்சலுக்கும் இந்த மூலிகை மிகச்சிறந்த மருந்தாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக