Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

9.1.14

கண்களை காக்க எளிய வழிகள்-(KANGALAI KAKKA YELIYA VAZHIGAL).

விழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்களையும் விந்தைகளையும் கண்ணால் காண உதவுகிறது. அத்தகைய பெரும் வேலையை செய்யும் நம் கண்களுக்கு ஆபத்து மிக எளிதில் வந்துவிடுகிறது. அதனை காக்கவோ மிக எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது...

வழிகள்;

1. டிவி பார்க்கும் போது இருட்டு அறையில் பார்க்காமல் திரைக்கு பின் ஏதேனும் ஒரு ஒலி இருக்கும்படி கவனித்துகொள்ளவும்.

2. படிக்கும் பொழுது கண்களை மிகவும் அலட்டாமல், கண்கள் சோர்வடையும் வரை நீடித்து படிக்காமல் இருக்கவும்.

3. கான்டேக்ட் லென்ஸ் அல்லது கண்ணாடிகளை தேவைக்கு ஏற்ப உபயோகிக்கவும்.

4. கம்ப்யூட்டர் மானிட்டரை கண்பார்வைக் கோட்டிற்கு கீழ் அமையும்படி பார்த்துகொள்ளவும்
5. கண்களை அவ்வப்போது பரிசோதிக்கவும்

6. பயணத்தின் போது படிப்பதை தவிர்க்கவும்

7. புத்தகத்தை எப்போதும் 40 செ.மீ தொலைவில் வைத்து படிக்கவும்

8. நல்ல வெளிச்சத்தில் படிக்கவும்

9. நேராக உட்கார்ந்து வேலை செய்ய பழகவும்

10. நல்ல தூக்கம் அவசியம்

11. புகைப்பழக்கத்தை கைவிடவும் 

12. கண்களை குளிர்ந்த நீரில் தேவையான நேரங்களில் கழுவவும்

கண்களுக்கு ஏற்ற உணவுகள்; 

1. கீரை உணவுகளை வாரம் இரண்டுமுறையாவது சாப்பிடுவது அவசியம்

2. மீன் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கண்களுக்கு அவசியம் 

3. வகையான நிறங்களை கொண்ட இயற்கை உணவுகளை அதிகம் சேர்க்களாம் 

4. முட்டை, வெண்ணெய் வாரம் இரு முறை என சாப்பிடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக