st

மன அழுத்தம்-(Mana Alutham)

      மன அழுத்தம், மனச்சோர்வு, மன உளைச்சல் இம்மூன்றும் வெவ்வேறு வார்த்தைகளைக் கொண்டிருந்தாலும், அடிப்படையில் ஒன்றுதான். மனதை காயப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை யார் செய்தாலும், இந்த உளைச்சலும், சோர்வும், ஒருவிதமான அழுத்தமும் ஏற்படுகிறது. மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் எதையோ இழந்தது போல் சோர்ந்து போய்விடுவார்கள்

     செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு நம்பில் பலர் ஆளாகின்றனர். அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் - மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர். அதேபோல மன அழுத்தம் போக்கும் உணவு வகைகளையும் நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஆரஞ்ச் ஜூஸ் :

மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாக உணரும் பட்சத்தில் ஆரஞ்சு பழத்தை உரித்து ஜூஸ் போட்டு குடியுங்கள். உடலும், மனமும் கொஞ்சம் புத்துணர்ச்சி அடையும். இதில் உள்ள வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை மன அழுத்தம் போக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


கீரைகள்:


 ஆவகேடோ பச்சைக்கீரைகள், இலைக்காய்கறிகளில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது. இவற்றை சாப்பிடலாம். ஆவகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் 14 வகையான நுண்சத்துக்கள் உள்ளன. அதில் உள்ள செரடோனின் மன அழுத்தத்தை குறைக்கிறது.

நார்ச்சத்து உணவுகள் :

மன அழுத்தத்தைக் குறைப்பதில், நார்ச்சத்து நிறைந்த தானியங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவை 'செரடோனின்' என்கிற ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இது மூளையை அமைதியாக வைத்திருக்க உதவும்.


மீன் உணவுகள் :

பசலைக் கீரை மன உளைச்சலை குறைக்கச் செய்யும் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல மீன் உணவில் அதிகமாக இருக்கும் ஒமேகா-3 என்கிற கொழுப்புச் சத்தும் மனஅழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.கொட்டை வகை உணவுகள்:


மன அழுத்தம் இருப்பவர்கள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை வாரத்துக்கு மூன்று முறை 15 கிராம் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், ரத்தத்தில் சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், இவற்றை குறைவாக எடுத்துக் கொள்ளவேண்டும். பெரும்பாலும் எண்ணெய் வகைகள் மற்றும் இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.என்ன அடையாளம் :

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றியும் மன உளைச்சளை குறைக்கலாம். மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள் வலி வரும். சிலருக்கு சுவாசம் அதிகமாகும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.


விரல் அழுத்தம் :


உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.


புன்னகையின் சக்தி :

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர்.நண்பர்களோடு பேசுங்கள் :


அழுத்தம் போக்கும் நட்பு மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள். மன அழுத்தம் சிக்கலானதுதான் அதை எளிமையாக நீக்கி அதிலிருந்து வெளியேறாலாம் என்கின்றனர் நிபுணர்கள். முயற்சி செய்யுங்களேன்.  2 comments

Post a Comment