Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

11.1.14

மூட்டு வலி; சில காரணங்களும் காரியங்களும்-(MOTTU VAZHI SILA KARANANGALUM KARIYANGALUM )



வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டி பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. அதிலும் தற்போது நச்சு கலந்த உணவு வகைகள், இயற்கையில் விளையும் பொருளை நேரடியாக உட்கொள்ள முடியாத நிலை, இது போன்ற பல காரணங்களால் வராத வியாதி எல்லாம் வந்து பாடாய் படுத்துகின்றது.

வாத நோய்களில் நாள்பட்ட மூட்டு வலி மிகவும் கடுமையாக இருக்கும். அதிலும் இந்த காலத்தில் இளைஞர்களும் இதனால் அவதிப்படுகின்றனர். இந்த வலி வந்தால், மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு காரணம் உடலில யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும்.

நாளடைவில் பெரிய நோயாக மாறும் இந்த மூட்டு வலிக்கு நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. உணவில் உள்ள கரோட்டீன் மூலம் வலியை நிவாரணம் செய்யமுடியும். இந்த கரோட்டீன் நாம் அன்றாடம் உபயோகிக்கும் வெங்காயத்தில் அதிகப்படியாக உள்ளது.

அதே சமயம் எப்படி ஒருசில உணவுகள் மூட்டு வலிகளுக்கு தீர்வு தருகின்றதோ, அதேப் போல் ஒருசில உணவுகள் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

முக்கியமாக யூரிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளான தக்காளியை சாப்பிட்டால், இன்னும் மூட்டு வலியானது அதிகமாகுமே தவிர குணமாகாது. எனவே வாத நோய்கள் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைய தேதியில் முக்கிய வாத நோய்களில் ஒன்றானது ஆர்த்ரிடிஸ் , இதனை கட்டுப்படுத்த எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும், எந்த உணவுகளை உண்ண கூடாது என்று தெரிந்து கொள்வதே புத்திசாலித்தனம்.

பூசணிக்காய்: பூசணிக்காயில் கரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிடுவதால், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் மற்றும் வலிகள் போன்றவற்றை நாளடைவில் குணமாகும்.

தக்காளி: தவிர்க்க வேண்டிய முக்கிய பழம். தக்காளியின் விதைகளில் யூரிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே தக்காளியை அதிகம் சாப்பிட்டால், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவானது அதிகமாகி, வலியானது இன்னும் கடுமையாகிவிடும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

மீன்: சாப்பிடவும், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால், அவை உடலின் மூட்டுகளில் உள்ள காயங்களை குணப்படுத்தும். மேலும் அவை உடலில் உள்ள குருத்தெலும்பு திசுக்களை(Cartilage tissue) சாப்பிடும் உற்பத்தியை தடுத்துவிடும்.

மாட்டிறைச்சி: தவிர்க்கவும், மூட்டுகளில் வலி இருப்பவர்கள், பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளான மாட்டிறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரம் உடலில் பாஸ்பரஸ் அதிகம் இருந்தால், எலும்புகளில் உள்ள நிறைய கால்சியத்தை இழக்க நேரிடும்.

க்ரீன் டீ: சாப்பிடவும், க்ரீன் டீயில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே அவை உடலின் மூட்டுகளில் ஏற்படும் வலியின் அளவை குறைத்துவிடும். மேலும் இதில் உள்ள நிக்கோட்டின் ஒரு சிறந்த வலி நிவாரணி.

பால்: தவிர்க்கவும், பாலில் அதிகமான அளவில் ப்யூரின் இருப்பதால், அவை யூரிக் ஆசிட்டின் அளவை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

ஆலிவ் ஆயில்: சாப்பிடவும் , இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளதால், அவை மூட்டுகளில் எந்த பிரச்சனை இருந்தாலும் சரிசெய்யும்.

சமையல் எண்ணெய்: தவிர்க்கவும் சமையல் எண்ணெய்களான சோயா பீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்களில் அதிகமான அளவில் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இந்த ஃபேட்டி ஆசிட்கள் மூட்டுகளில் காயங்கள் மற்றும் வலிகளை அதிகமாக்கும்.

பிரேசில் நட்ஸ்: சாப்பிடவும் பிரேசில் நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. ஆகவே இவை மூட்டு வலியை குணமாக்குவதில் சிறந்ததாக உள்ளது.

கடல் சிப்பி: தவிர்க்கவும், சிப்பிகளில் ப்யூரின் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், யூரிக் ஆசிட்டின் அளவி அதிகமாகி, மூட்டுகளில் வலியும் அதிகமாகும்.

ஆரஞ்சு: சாப்பிடவும், ஆரஞ்சு பழத்தின் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், அவை எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை தரும்.

சர்க்கரை: தவிர்க்கவும், மூட்டு வலிகளுக்கு சர்க்கரை மிகவும் கேடு விளைவிக்கும் ஒரு உணவுப் பொருள். ஏனெனில் சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதால், மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும்.

வெங்காயம்: சாப்பிடவும் வெங்காயத்தில் க்யூயர்சிடின் (quercetin) என்னும் கெமிக்கல் உள்ளது. இந்த கெமிக்கல் அஸ்பிரின் (aspirin) போன்றே, ஒரு சிறந்த வலி நிவாரணி.

கெஃப்பைன்: தவிர்க்கவும், கெஃப்பைன் உடலில் வறட்சியை ஏற்படுத்தி, மூட்டுகளில் வலியை அதிகரிக்கும். மேலும் அவை உடலில் உள்ள சத்துக்களை வெளியேற்றி, மூட்டுகளில் வலியை அதிகரிக்கும்.

மஞ்சள்: சாப்பிடவும், மசாலாப் பொருட்களில் மஞ்சளும் ஒன்று. அதுமட்டுமின்றி, மஞ்சள் ஒரு கிருமி நாசினி. எனவே இதில் உள்ள மருத்துவப் பொருளானது, உடலில் உள்ள காயங்களை குணப்படுத்தி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்துவிடும்.

தானியங்கள்: தவிர்க்கவும், கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே அவற்றை சாப்பிடும் போது, அவை ஆர்த்ரிடிஸ் நோய்க்கான அறிகுறியை அதிகரிக்கும்.

செர்ரி: சாப்பிடவும், செர்ரியில் உள்ள ஆந்தோசயனின்கள், குருத்தெலும்புகள் மற்றும் ஜவ்வுகளை வலுப்படுத்த உதவும். இதனால் மூட்டு வலி இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால், வலியை குறைத்து, மூட்டுகளை வலுவாக்கலா,.

மது: தவிர்க்கவும், மது பழக்கத்தால் உடலில் கால்சியம் சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படாமல், எலும்புகளை வலுவிழக்கச் செய்யும். அதிலும் இதனை கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்தால், கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, உடல் நிலை மோசமாகிவிடும்.

இஞ்சி: சாப்பிடவும், இஞ்சியிலும் மஞ்சளைப் போன்ற மருத்துவக் குணம் உள்ளது. எனவே மூட்டு வலிகள் இருப்பவர்கள் தினமும் இஞ்சியை சேர்த்துக் கொள்வது சிறந்த நன்மையைத் தரும்.

காய்கறிகளில் தவிர்க்க வேண்டியவை: கத்திரிக்காய், சிவப்பு குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றில் அல்கலாய்டுகள் அதிகம் இருப்பதால், அவை மூட்டுகளில் காயங்களை அதிகப்படுத்தி, குணமாகிக் கொண்டிருக்கும் மூட்டு வலியையும் குணமாகாமல் தடுக்கும். எனவே இந்த காய்கறிகள் உணவில் சேரமால் கவனம் கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக