Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

25.1.14

பப்பாளி மருத்துவ குணம்.-(PAPPALI MARUTHUVA GUNAM)


இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் சர்வசாதாரணமாக நாம் பார்க்கக் கூடிய மரங்களில் ஒன்று பப்பாளி மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த பழம் பப்பாளியில், வைட்டமின் ஏ, சி ஷ்மற்றும் இ ஆகியவை உள்ளன.

பப்பாளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும். நார்சத்து மிக்கது. செரிமானத்துக்கு நல்லது. உடலுக்கு புத்துணர்வை தரும் பப்பாளி, தோலில் ஏற்படும் குறைபாடுகளை களையவல்லது...

இதனால் உடல் பொலிவு பெறும். கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. இதயம் தொடர்பான பிரச்னைகள், கேன்சர் வராமல் தடுக்கிறது. இதுபோன்று பல்வேறு நன்மைகளை தரும் பப்பாளி பழம், மற்ற பழங்களை விட விலையும் குறைவு. எளிதாகவும் கிடைக்க கூடியது. எனவே, பப்பாளி பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே. பப்பாளி பழத்தை காயாகவோ, அதிமாக பழுத்த பின்னரோ சாப்பிடுவதை விட, சரியான பதத்தில் உள்ள பழத்தை சாப்பிடுவதே சிறந்தது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக